உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈக்காடு பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா

ஈக்காடு பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா

ஈக்காடு: ஆதிகேசவ பெருமாள் கோவிலில், நடைபெற்ற உறியடி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு கிராமம், மண்டப வீதியில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு உறியடித்தனர். அன்றிரவு, சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !