உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்­தி­யம்மன் ஜாத்­திரை திரு­விழா

சக்­தி­யம்மன் ஜாத்­திரை திரு­விழா

ஆர்.கே.பேட்டை: விளக்­க­ணாம்­பூடி புதூர் சக்­தி­யம்மன் கோவிலில் ஜாத்­திரை திரு­விழா நடந்­தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, விளக்­க­ணாம்­பூடி புதூர் கிரா­மத்தில் உள்ள சக்­தி­அம்மன் கோவிலில், ஜாத்­திரை திரு­விழா நடந்­தது. காலை 9:00 மணிக்கு, அம்­ம­னுக்கு அபி­ஷேகம், அலங்­காரம் நடந்­தன. பெண்கள், பொங்கல் வைத்து படையல் வைத்­தனர். 11:00 கூழ் வார்த்­தலும், அன்­ன­தா­னமும் நடை­பெற்­றன. மாலை, பம்பை, உடுக்கை முழங்க, உற்­சவம் சிறப்­பாக நடந்­தது. இதே போல், ஆர்.கே. பேட்­டை­யிலும், அம்மன் திரு­விழா நடந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !