உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்ன தர்மம் பெரிய லாபம்

சின்ன தர்மம் பெரிய லாபம்

வல்லபதேவ பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில், இறைவன் என்றால்  பிரம்மாவா, சிவனா, திருமாலா என்ற கேள்வி அவனுள் எழுந்தது. உண்மைப்பொருளை அறிய அவன் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தான். பெரியாழ்வார் அந்த போட்டியில் வென்று திருமாலே பரம்பொருள் என நிரூபித்தார். இந்தக் கேள்வி அவனது மனதில் எழ காரணமாக இருந்தவர் ஒரு அந்தணர்.இவர் காசி சென்று விட்டு, மதுரை வரை நடந்தே வந்து குளிர் தாங்காமல் ஓரிடத்தில் முடங்கிக்கிடந்தார். நகர்வலம் வந்த பாண்டியன், குளிரில் நடுங்கிய அவர் மீது தன்னிடமிருந்த ஒரு துணியை அவர் மீது போர்த்தினான். அவர் மகிழ்ந்து அவனை வாழ்த்தினார். இந்த தர்மத்துக்காக உன் வம்சமே நன்றாக வாழும். மறுமைக்காக சேர்த்து வைக்கும் புண்ணியம் இதுவே. இதுபோல் பல புண்ணியச்செயல்கள் செய்து இறைவனைச் சரணடைந்தால் முக்தி நிச்சயம், என்றார். அப்போது தான் எந்த இறைவனைச் சரணடைந்தால் முக்தி கிடைக்கும் என்ற கேள்வி பாண்டியன் மனதில் எழுந்தது. அதற்காக வைக்கப்பட்ட போட்டியில் பெரியாழ்வார் வென்றார். பெருமாளும் மதுரை நகரில் கருடன் மீது பவனி வந்து காட்சி தந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !