நலிந்தோருக்கு நாளும் கோளும் இல்லை.. விளக்கம் தேவை
ADDED :4509 days ago
நலிந்தவர் என்றால் ஏழை என்று மட்டும் பொருள் கொள்ளக்கூடாது. பொருள் இருந்தாலும் பலவகை கஷ்டங்களில் சிக்கி நலிந்திருப்பவர்களையும் குறிக்கும். துன்பம் என்பது, ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை. உதாரணமாக, ஒருவருக்கு உடல்நிலை திடீரென மோசமடைந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ராகுகாலம், எமகண்டம் பார்க்க முடியாதல்லவா? அதற்காகத்தான் இப்படி சொல்லி வைத்தார்கள்.