உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜாத்­திரை திரு­வி­ழா­விற்கு.. வெல்கம் கங்­கை­யம்மன் பை பை பிள்­ளையார்!

ஜாத்­திரை திரு­வி­ழா­விற்கு.. வெல்கம் கங்­கை­யம்மன் பை பை பிள்­ளையார்!

ஆர்.கே.பேட்டை: ஜாத்­திரை திரு­வி­ழா­விற்கு கங்­கை­யம்­மனை வர­வேற்ற பக்­தர்கள், ஆடு, கோழி­களை பலி­யிட வேண்­டிய கார­ணத்தால், பிள்­ளை­யாரை அவ­ச­ர­க­தியில் வழி­ய­னுப்பி வைத்­தனர். ஆர்.கே.பேட்டை பகு­தியில், வங்­கனூர், அம்­மை­யார்­குப்பம், ஸ்ரீகா­ளி­கா­புரம், விளக்­க­ணாம்­பூடி, கிருஷ்­ணாகுப்பம், ஆர்.கே.பேட்டை உள்­ளிட்ட கிரா­மங்­களில் நேற்று, கங்­கை­யம்மன் ஜாத்­திரை திரு­விழா நடந்­தது. நடுத்­தெ­ருவில் அமைக்­கப்­பட்ட வேப்­பிலை குடிலில், உற்­சவர் அம்மன் அமர்த்­தப்­பட்டார். காலை, மாலை என, கரகம், கிரா­மத்தை சுற்றி வந்­தது. பெண்கள் நேற்று முன்­தினம் மாவி­ளக்கு ஏற்றி, விர­தத்தை துவக்­கினர். நேற்று இரவு 8:00 மணி­ய­ளவில், அம்­ம­னுக்கு கும்பம் செலுத்­தப்­பட்­டது. இதில், திர­ளான பக்­தர்கள் வேப்­பிலை ஆடை உடுத்தி வந்­தனர். அம்­ம­னுக்கு நேர்த்­திக்­க­ட­னாக, ஆடு, கோழி உள்­ளிட்­டவை பலி­யி­டப்­பட்­டன. இன்று காலை, கங்­கை­யம்­மனை, கங்­கையில் கரைக்கும் நிகழ்ச்சி நடக்­கி­றது. ஆர்.கே.பேட்­டையில் நாளை இரவு, திர­வு­ப­தி­யம்மன் உற்­ச­வமும், ெவள்ளிக்­கி­ழமை பொன்­னி­யம்மன் உற்­ச­வமும் நடக்­கி­றது. இந்­நி­லையில், திங்­கள் ­கி­ழமை விநா­யகர் சதுர்த்தி கொண்­டா­டப்­பட்­டது. வீடு­களில், களிமண் விநா­யகர் சிலைகள் வைத்து, பூஜை நடத்­தினர். புதன்­கி­ழமை விநா­யகர் சிலை­களை நீர்­நி­லை­களில் கரைக்­கப்­ப­டு­வ­தாக இருந்­தது. இத­னி­டையே, நேற்று அம்­ம­னுக்கு கரு­வாட்டு குழம்­புடன் அசைவ படை­யலும், ஆடு, கோழி பலி­யி­டப்­ப­டு­வதும் இருந்­ததால், திங்­கள்­கி­ழமை மாலையே, விநா­ய­கரை, பக்­தர்கள் நீர்­நி­லை­களில் எடுத்துச் சென்று கரைத்­தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !