உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜாத்­திரை திரு­விழா: கங்­கை­யம்மன் சிறப்பு அலங்­கா­ரத்தில் திரு­வீ­தி­யுலா

ஜாத்­திரை திரு­விழா: கங்­கை­யம்மன் சிறப்பு அலங்­கா­ரத்தில் திரு­வீ­தி­யுலா

திருத்­தணி: மத்துர் மற்றும் புச்­சி­ரெட்­டிப்­பள்ளி ஊராட்­சி­களில் நடந்த ஜாத்­திரை திரு­வி­ழாவில், கங்­கை­யம்மன் சிறப்பு அலங்­கா­ரத்தில் திரு­வீ­தி­யுலா வந்து பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்தார். திருத்­தணி ஒன்­றியம், மத்தூர் மற்றும் புச்­சி­ரெட்­டிப்­பள்ளி ஆகிய இரண்டு ஊராட்­சி­களில், ஜாத்­திரை திரு­விழா, நேற்று முன்­தினம் நடந்­தது. விழா­வை­யொட்டி எல்­லை­யம்மன், கங்­கை­யம்மன் ஆகிய கோவில்­களில் பெண்கள் கூழ் ஊற்றி வழிப்­பட்­டனர். தொடர்ந்து, மாலையில் திர­ளான பெண்கள் கோவில் வளா­கத்தில் பொங்கல் வைத்து, அம்­ம­னுக்கு படைத்து வழிப்­பட்­டனர். இரவு, 7:30 மணிக்கு களி­மண்ணால் செய்­யப்­பட்ட கங்­கை­யம்­ம­னுக்கு, சிறப்பு அலங்­காரம் செய்து தீபா­ரா­தனை நடந்­தது. பின்னர், கிரா­மத்தில் அனைத்து தெருக்­க­ளிலும், பூ கர­கத்­துடன், கங்­கை­யம்மன் திரு­வீ­தி­யுலா வந்து பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்தார். இதே போல், திருத்­தணி நக­ராட்­சிக்கு உட்­பட்ட, 21வது வார்டு முருகூர் பகு­தியில் ஜாத்­திரை திரு­விழா நடந்­தது. கங்­கை­யம்மன் திரு­வீ­தி­யுலா நடந்­தது. தொடர்ந்து, நேற்று காலை கங்­கை­யம்மன் ஊர்­வ­ல­மாக கொண்டு செல்­லப்­பட்டு, அங்­குள்ள ஏரியில் கரைத்து வழி­பட்­டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !