உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபத்ரசாயி கோயிலில் பவித்ர உற்வசம் துவக்கம்

வடபத்ரசாயி கோயிலில் பவித்ர உற்வசம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில், பவித்ர உற்சவம் நேற்று துவங்கியது. காலை 11 மணிக்கு,60 கலச அபிஷேகம் நடந்தது. வேதபிரான்பட்டர் மாளிகையிலிருந்து கொண்டு வரப்பட்ட, மஞ்சள் நூலினால் செய்யப்பட்ட பவித்ரமாலை, பெருமாளுக்கு சார்த்தப்பட்டு, சிறப்பு பூ ஜைகள் நடந்தன . 21ம் தேதி வரை நடக்கும் விழாவின் கடைசி நாளன்று இரவு ,வடபத்ரசாயி கருட வாகனம், பெரியாழ்வார் அன்ன வாகனத்தில், வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !