சிவன் கோவில்களில் பிரதோஷம்
ADDED :4441 days ago
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர், ஏமப்பேர் காசி விசாலாட்சி சமேத விஸ்வ நாதேஸ்வரர், தென்கீரனூர் மற்றும் முடியனூர் அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர், நீலமங்கலம் காமாட்சி அம்பிகா சமேத ஏகாம்பரேஸ்வரர், வரஞ்சரம் பாலகுஜாம்பிகா சமேத பசுபதீஸ்வரர் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர். நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. பெண் கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். சிவபக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.