உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்கு வைஷ்ணவ மகாசபை அலங்கார குடை வழங்கல்

ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்கு வைஷ்ணவ மகாசபை அலங்கார குடை வழங்கல்

விருத்தாசலம்: விருத்தாசலம் வைஷ்ணவ மகா சபை சார்பில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகவ பெருமாள் கோவிலுக்கு சுவாமி அலங்கார குடை வழங்கப்பட்டது. விருத்தாசலம் வைஷ்ணவ மகா சபையினர், ஆன்மிக அன்பர்கள் ஸ்ரீமுஷ்ணம் பூவராகவ பெருமாள் கோவிலுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன்படி, விருத்தாசலம் வைஷ்ணவ மகா சபையினர் 11வது ஆண்டு பாதயாத்திரை புறப்பாடு நிகழ்ச்சி, சாத்துக்கூடல் ரோட்டில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று நடந்தது. அப்போது ஸ்ரீமுஷ்ணம் பூவராகவ பெருமாள் கோவிலுக்கு, வைணவ பக்தர் சீனுவாசன், வைஷ்ணவ பாதயாத்திரைக் குழுவினர் வழங்கிய சுவாமி அலங்கார குடைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பின்னர், விருத்தாசலம் இந்தியன் வங்கி மேலாளர் துவாரகநாத் குடையை பாதயாத்திரை குழுவிடம் ஒப்படைத்தார். வைஷ்ணவ மகா சபை செயலர் அனந்தகிருஷ்ணன், வேங்கடவேணு, மணிவேல் மற்றும் ஆழ்வார்கள் கைங்கர்ய சபையினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !