நிமிலீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா
ADDED :4431 days ago
வில்லியனூர்: கூடப்பாக்கம் நிலோத்பலாம்பிகை உடனுறை நிமிலீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி விழாவில் இரண்டாம் ஆண்டு சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 7.00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் அம்மையப்பர் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கூடப்பாக்கம் மாரியம்மன் தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஹரிஹரி நமோநாராயணா, சிவனடியார் கூட்டத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.