உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலிலை கண்ணனாக பெருமாள் அருள்பாலிப்பு!

ஆலிலை கண்ணனாக பெருமாள் அருள்பாலிப்பு!

காரைக்கால்:காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாணப்பெருமாள், ஆலிலைக் கண்ணனாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவில் மூலவரான ரங்கநாதர் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி, மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. உற்சவரான நித்ய கல்யாண பெருமாள், ஆலிலைக் கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோன்று, காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் உற்சவர், வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !