பண்ணாரி கோவில் முன்வாகனம் நிறுத்த தடை!
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் முன், சாலையில் வாகனங்களை நிறுத்த திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவில், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோ விலாக உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகாவில் இருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிலில் குவிந்து, அம்மனை தரிசித்து வருகின்றனர்.பல்வேறு வாகனங்களில் இருந்து வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை கோவில் முன், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதனால், அப்பகுதியில் அடி க்கடி போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. எனவே, பண்ண õரி கோவில் முன் வாகனங்களை நிறுத்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவில் முன், வாகனங்களை நிறுத்தக்கூடாதென்ற, பலகையை போலீஸார் வைத்துள்ளனர். பண்ணாரி மாரியம்மன் கோவில் முன், வாகனங்களை நிறுத்த தடை விதித்ததால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.