உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளையந்தீவு செல்ல டிக்கட் இலவசம்

வெள்ளையந்தீவு செல்ல டிக்கட் இலவசம்

வெள்ளையந்தீவு என்ற புதிய தீவு பற்றி கேள்விப்பட்டதுண்டா? இது எங்கிருக்கிறது என்று குழம்ப வேண்டாம். திருமால் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலையே வெள்ளையந்தீவு என்பர். இங்கு, ஆதிசேஷன் என்னும் பாம்புப்படுக்கையில் ஸ்ரீதேவியும், பூமிதேவியும் பாதத்தை வருடிக் கொண்டிருக்க பெருமாள் யோகநித்திரையில் ஆழ்ந்து இருக்கிறார். இந்த உலகில் நடக்கும் அனைத்தையும் அறிந்தபடி துயில் கொண்டிருப்பதே யோகநித்திரை. அசுரர்களால் துன்பம் நேரும் போதெல்லாம், தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் பாற்கடலின் கரையில் நின்று பெருமாளிடம் முறையிடுவர். அதனால், இதற்கு கூப்பாடு கேட்கும் உலகம் என்றும்  பெயருண்டு. வெள்ளையந்தீவுக்கு சென்று திருமாலை தரிசிக்கும்பேறு வேண்டுமானால், எட்டு எழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை மனதார உச்சரிப்பது தான் வழி. இதுதான் இங்கு செல்ல பயன்படும் இலவச டிக்கட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !