சூரியநமஸ்காரம் செய்தால் உண்டாகும் நன்மை என்ன?
ADDED :4790 days ago
ஆரோக்கியம், ஆத்மபலம், செயல் வெற்றி பெற சூரியனை வணங்கும்படி ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய நமஸ்காரத்தால் ஆரோக்கியம் உண்டாகும் என்று யோக சாஸ்திரம் கூறுகிறது. கண் கண்ட தெய்வமான சூரியனை, காலையில் நீராடியதும் கிழக்குநோக்கி நின்று வணங்கினால் நாள் முழுவதும் நன்மை உண்டாகும்.