தோடுடைய செவியன் என்று சிவனைக் குறிப்பிடுவது ஏன்?
ADDED :4790 days ago
சிவன் உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து அம்மையப்பராக விளங்குகிறார். அதனால், சுவாமியின் இடது காதில் அம்பிகையின் அணிகலனான தோடு இடம் பெற்றுள்ளது. தன் முதல் தேவாரப் பாடலான இதில், பசி தீர்க்க பாலூட்டிய அம்பிகையை, சம்பந்தர் நன்றியோடு குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.