உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் திரண்டனர்

கோவில்களில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் திரண்டனர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில் சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் கோவில்களில் பிரதோஷத் தன்று சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். இம்முறை நேற்று பிரதோஷ நாளாக அமைந்தது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் சுற்றுப்புற கோவில்களில் சிவன் மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்றுமுன்தினம் விஷ்வக்சேனர் ஆராதன நிகழ்ச்சியுடன் பூஜை துவங்கியது. மேலும், வாசுதேவ புண்யாகாஜனம், மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், பஞ்சசூக்த பாராயணம், மூல மந்திரங்கள் ஜபம், சாற்றுமறை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை 4.00 மணிக்கு தேன், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், பால், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. அலங்கார நெய்வேத்திய பூஜை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. சிவனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோநாதருக்கும், நந்திக்கும் ஒரே சமயத்தில், பால், பன்னீர், தேன், இளநீர், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் போன்றவைகளால் அபிஷேக பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, பூக்களால், சிவலோகநாதருக்கும், சிவலோகநாயகிக்கும், நந்திக்கும் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொன்மலை வேலாயுதசாமி, பெரியகளந்தை ஆதிஸ்வரன், தேவணாம்பாளையம் அமணலிங்கேஷ்வரர், அரசம்பாளையம் திருநீலகண்டர் போன்ற சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இளநீர், தயிர், சந்தனம்,குங்குமம், பால், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. அலங்கார நெய்வேத்திய பூஜை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.சிவனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !