அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் 18ல் மகா அன்னாபிஷேகம்
ADDED :4501 days ago
பொள்ளாச்சி அடுத்த கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா அன்னாபிஷேகம் மற்றும் முதலாம் ஆண்டு விழா வரும் 18ம் தேதி நடக்கிறது.கரப்பாடியில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நந்தீஸ்வரர் சுவாமிகளுக்கு முதலாமாண்டு விழாவும் வரும் 18ம் தேதி நடக்கிறது. மாலை 3.00 மணிக்கு மகா கணபதி ஹோமம், மூல மந்திர ஜெபத்துடன் விழா துவங்குகிறது. தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நந்தீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. அமணலிங்கேஸ்வரருக்கு பழங்கள், காய்கள், அன்னம் கொண்டு அபிஷேகம் நடக்கிறது. மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.