நவராத்திரி உற்சவம் அக் 5 கோலாகலம்
ADDED :4441 days ago
கரூர்: ரெங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் நவராத்திரி உற்சவ விழா அக் 5 கோலாகலமாக துவங்குகிறது.பிரசித்தி பெற்ற கரூர் அபயபிரதானரெங்கநாத ஸ்வாமி கோவிலில் அக் 5 ராமாவதாரமும் அக் 6 வெண்ணைதாழி கிருஷ்ணன், வரும் 7 ம் தேதி வாமனாவதாரம், 8 ம் தேதி வேணுகோபால கிருஷ்ணன், 9 ம் தேதி ஸ்ரீ லெட்சுமி, 10 ம் தேதி ஸ்ரீ ஆண்டாள், 11 ம் தேதி காளிங்க நர்த்தனம், 12 ம் தேதி ராஜதர்பார், 13 ம் தேதி ஸ்ரீ சரஸ்வதி, 14 ம்தேதி ஸ்வாளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆற்றில் அம்பு போடுதல், 15 ம்தேதி ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. உற்சவ நாட்களில் காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு மஹா தீபாராதனைகளும் நடக்கிறது.