உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயிலில் சனிவாரத்திருவிழா

கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயிலில் சனிவாரத்திருவிழா

கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயில், புரட்டாசி மூன்றாவது சனிவாரத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோம்பை ராமக்கல் மெட்டு அடிவாரத்தில், ஆனந்த சயனத்தில் உள்ள சுயம்பு மூலவரை தரிசிக்க தேனி, மதுரை, திண்டுக்கல், மத்திய கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மலைகள் சூழ்ந்த திருமலை ராயப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடந்தது. ஊர்கோயிலில் நவராத்திரி கொழு வைத்துள்ளதால், உற்சவருக்கு பதிலாக சக்கரத்தாழ்வாருக்கு பூஜைகள் நடந்தன. போடி, கம்பம், தேவாரத்திலிருந்து மலைக்கோயில் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோம்பை ஜமீன்தார் அப்பாஜி ராஜ்குமார் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அனுமந்தன்பட்டி ஹனுமந்தராயப்பெருமாள் கோயிலில்சனிவாரத்திருவிழா
அனுமந்தன்பட்டி ஹனுமந்தராயப்பெருமாள் கோயிலில், புரட்டாசி மூன்றாவது சனி வாரத்தை முன்னிட்டு, மூலவர் சனீஸ்வர பந்தன ஆஞ்சநேயருக்கு பழ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நெல்லி, மாதுளை, கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்கள் படைக்கப்பட்டிருந்தன. பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக ஆதி அந்தபெருமாள் திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொங்கல், வடை பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் வெங்கட்ராமன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !