சிறப்பு அலங்காரத்தில் காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள்
                              ADDED :4406 days ago 
                            
                          
                          
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள், திருவைகைமுடையான் அலங்காரத்தில் அருள்பாலித்தார். காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையான நேற்றுமுன்தினம் மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின், நித்ய கல்யாண பெருமாள், திருவைகைமுடையான் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி ராஜராஜன் விராசாமி, நித்ய கல்யாண பக்த ஜனசபாவினர் செய்திருந்தனர்.