பாதூர் பெருமாள் கோவில் தங்க கருட வாகன உற்சவம்
ADDED :4416 days ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நாளை பிரம்மோற்சவ தங்க கருட வாகன உற்சவம் நடக்கிறது.உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. நேற்று காலை திருப்பல்லக்கு திருமஞ்சனம், இரவு ஹனுமந்த வாகன வீதியுலாவும் நடந்தது. இன்று காலை திருப்பல்லக்கு திருமஞ்சனம், இரவு சேஷ வாகன உற்சவமும் நடக்கிறது. நாளை (8ம் தேதி) காலை 8 மணிக்கு திருப்பல்லக்கு பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை, 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு 11 மணிக்கு தங்க கருட வாகன வீதியுலா உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 15ம் தேதி வரை நடக்கவுள்ள பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளில் சுவாமி வீதியுலா நடக்கிறது.