பிறவி மருந்தீஸர் கோவிலில் நவராத்திரி கலைவிழா
ADDED :4480 days ago
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸர் கோவிலில் நவராத்திரியையொட்டி, இரண்டாவது நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்வாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேம் நடந்தது. மங்கலநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வலம் வந்து, அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து கோவில் கலையரங்கில், தஞ்சை ஸ்ரீ அம்பாள் இசைக்குழு வேதையன் தலைமையில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். சிறப்பு நவராத்திரி நிகழ்ச்சி ஏற்பாட்டை, கோவில் நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.