கூடப்பாக்கம் பெருமாள் கோவிலில் கருட சேவை!
ADDED :4413 days ago
வில்லியனூர்: கூடப்பாக்கம் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, கருட சேவையில் சுவாமி வீதியுலா நடந்தது. வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் மாரியம்மன் தேவஸ்தானம் சார்பில், தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருமஞ்சனமும், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு கோபுர தரிசனமும், அதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமி கருடசேவையில் வீதியுலாவும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ஹரிஹரநமோநாராயணா மேற்பார்வையில், உபயதாரர் அய்யனார் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.