உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்ட சரஸ்வதிகள்!

அஷ்ட சரஸ்வதிகள்!

அஷ்ட லட்சுமிகள் இருப்பது போல், அஷ்ட சரஸ்வதிகளும் உள்ளனர். தாராபூஜை எனும் பூஜையில் அஷ்ட சரஸ்வதிகளின் எட்டு வித வடிவங்கள் கூறப்பட்டுள்ளன. வாகீஸ்வரி, சித்ரேஸ்வதி, துளஜா, (சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கடசரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய வடிவங்களே அவை. தண்டிமகா கவி கடசரஸ்வதியையும், சாலிவாஹன மன்னன் சித்ரேஸ்வதியையும், காளிதாசன் சரஸ்வதியை சியாமளா வடிவிலும் வழிபட்டுப் பெருமையடைந்தனர் என்று சரஸ்வதி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. வேதங்கள் பற்றிய அறிவை பெறுவதற்காக பிரம்மதேவர்தான் முதலில் சரஸ்வதியை வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !