உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் 6 கோபுர கலசங்கள் திருட்டு!

கோயிலில் 6 கோபுர கலசங்கள் திருட்டு!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சில்வர்புரம் குட்டத்து பேச்சியம்மன்-சுடலைமாட சுவாமி கோயிலில் இருந்த 6 கோபுர கலசங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். புதன்கிழமை காலை கோயிலுக்கு சென்ற பூசாரி இதனை கவனித்துள்ளார். அவர் கோயில் தர்மகத்தாவிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், சிப்காட் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !