துர்கா சிலை விசர்ஜனம்
ADDED :4377 days ago
பல்லடம்: இந்து மக்கள் கட்சி( தமிழகம்) பல்லடம் நகர கிளை சார்பில், கோட்டை விநாயகர் கோவில் வளாகத்தில் ஏழு அடி உயரம் உள்ள ஸ்ரீதுர்கா சிலை கடந்த 11ம்தேதி வைக்கப்பட்டது. சிலைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சிறப்பு பூஜை, ஹோமம் நடத்தப்பட்டது. நேற்று மாலை துர்கா சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது.இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் துவக்கி வைத்தார். என்.ஜி.ஆர்., ரோடு, கொசவம்பாளையம் ரோடு அண்ணா நகர், பனப்பாளையம் வழியாக வெட்டுப்பட்டான் குட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது. மாநில இளைஞரணி செயலாளர் பரமேஸ்வரன், நகர தலைவர் ராஜேஷ்கண்ணா, நகர செயலாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.