பெருந்துறை ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் திருவீதி உலா
ADDED :4379 days ago
பெருந்துறை: பெருந்துறை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில், புரட்டாசி திருத்தேரோட்ட விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 5 மணியளவில் சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலை, 5.30 மணியளவில் திருத்தேர் நகர் உலா நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், கோவிலை அடைந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, செயல் அலுவலர் சுகுமார் மற்றும் தேர்த்திருவிழா கமிட்டினர் செய்திருந்தனர்.