கடையநல்லூர் பகுதிகளில் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்
ADDED :4379 days ago
கடையநல்லூர்: கடையநல்லூர் பகுதிகளில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடையநல்லூர், இடைகால், கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், சொக்கம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கார், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் போன்றவற்றில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் கோயில்களில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு விசேஷ அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் வருகை தந்ததையும் பரவலாக காண முடிந்தது.