களக்காட்டில் அம்மன் கோயில்களில் தசரா திருவிழா
களக்காடு: களக்காட்டில் 4ம் ஆண்டு தசரா திருவிழா நடந்தது. களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயிலின் முன் 10 அம்மன் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதையொட்டி காலையில் சத்தியவாகீஸ்வரர் கோமதிஅம்பாள் கோயிலில் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு சந்திரசேகர சுவாமியின் பரிவேட்டை, தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதியுலா, வரதராஜபெருமாள் வீதியுலா நடந்தது. மாலை 6 மணிக்கு வரதராஜபெருமாள் பரிவேட்டை நடந்தது. இரவு பாரதிபுரம் உச்சினிமாகாளி அம்பாள், வடக்கு மாட வீதி கற்பகவள்ளி அம்பாள், பஸ் ஸ்டாண்ட் துர்க்கை அம்பாள், விஸ்வகர்மா தெரு சந்தனமாரி அம்பாள், கழுகேற்றிமுக்கு முப்பிடாதிஅம்பாள், தோப்புத்தெரு அங்காளபரமேஸ்வரி அம்பாள், நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்பாள், சிதம்பரபுரம் உச்சினிமாகாளி அம்பாள், கோவில்பத்து முப்பிடாதி அம்பாள், கப்பலோட்டிய தமிழன்தெரு முப்பிடாதி அம்பாள் ஆகிய அம்பிகையர்கள் கோமதி அம்பாள், சமேத சத்தியவாகீஸ்வரர், வரதராஜபெருமாள் ஆகியோர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதில் களக்காடு மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தசரா கமிட்டியினர் செய்திருந்தனர்.