உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலம் கோயிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி!

குற்றாலம் கோயிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி!

குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழாவில்நேற்று நடராஜருக்கு பச்சை சாத்தி தீபாராதனை நடந்தது. குற்றாலம் குற்றாலநாதசுவாமி குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு வாகனத்தில் சுவாமி, அம்பாள் காட்சி அளித்தலும்,சிறப்பு தீபாராதனையும் நடந்து வருகிறது. கடந்த 13ம்தேதி தேரோட்டம் நடந்தது. ஐப்பசி விசு திருவிழாவின் 8ம் நாளான நேற்று காலை நடராஜமூர்த்திக்கு சித்திரசபையில் பச்சை சாத்தி தீபாராதனையும், வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளலும் நடந்தது. மாலை பிட்சாடன மூர்த்தி எழுந்தருளல் பூங்கோயில் சப்பரம் ஆகியன நடந்தது. இன்று (17ம்தேதி) காலை வெள்ளி சப்பரமும், மாலை பூத வாகனம், காமதேனு வாகனத்தில் எழுந்தருளலும் நடக்கிறது. வரும் 18ம்தேதி) காலை 9மணிக்கு ஐப்பசி விசு தீர்த்தவாரி நடக்கிறது. 11 மணிக்கு மேல் ரிசப வாகன காட்சி, மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !