உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்

புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், விஜயதசமி விழாவை முன்னிட்டு, குழந்தைகளுக்கு "வித்யாரம்பம் கல்வி துவக்க நிகழ்ச்சி நடந்தது. முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவிலில், விஜயதசமி விழாவையொட்டி புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு, "வித்யாரம்பம் என்ற கல்வி துவக்க நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. விழாவில் ஏராளமான பெற்றோர்களும், குழந்தைகளும் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு எதிரில், நெல் பரப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதில், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, அ... ஆ... எழுதி, கல்வியை துவக்கி வைத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னாள் அமைச்சர் பங்கேற்புமுன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது குழந்தையின் கையைப் பிடித்து, அ...ஆ... எழுதி, கல்வியைத் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !