உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை

புதுச்சேரி பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை

புதுச்சேரி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி பகுதி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.பக்ரீத் பண்டிகையையொட்டி, நகர பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. நெல்லித்தோப்பு ஈத்கா மைதானம், முல்லா வீதி குத்பா பள்ளி வாசல், சந்தாசாஹிப் தெரு அகமதியா பள்ளி வாசல், கோவிந்த சாலை மஸ்ஜிதுந்நூர், பெரியகடை பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.காரைக்கால்காரைக்காலில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின், ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரித் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். காரைக்கால் மீராப்பள்ளி தோட்டம், கீதர் பள்ளிவாசல், செய்கு மொய்தீன் பள்ளி வாசல், பெரிய பள்ளிவாசல், புளியங்கொட்டை சாலை மஸ்ஜிதே, மொய்தீன் பள்ளிவாசல்களில் சிறப்பபு தொழுகை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !