உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரியையொட்டி காரைக்காலில் அம்பு போடும் விழா

நவராத்திரியையொட்டி காரைக்காலில் அம்பு போடும் விழா

புதுச்சேரி: காரைக்கால் பகுதியில் நவராத்திரி விழா நிறைவையொட்டி,  திருமலைராயன்பட்டினம் பகுதியில் உள்ள சிவ, வைணவத் தலங்கள் சார்பில், சுவாமிகள் குதிரை வாகனத்தில் அம்பு போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றன.  திருமலைராயன்பட்டினம்  பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ரகுநாதப் பெருமாள்,  வீழி வரதராஜப்பெருமாள்,  ராஜசோளீஸ்வரர்,  காமாட்சியம்மன் கோயிலில் இருந்து பெருமாள் மற்றும் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, போலகம் பகுதியில் உள்ள அம்புத் திடலுக்கு இரவு 10 மணியளவில் சென்றடைந்தன. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் முன்னிலையில், மகிஷாசூரனை வதைக்கும் சம்ஹாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !