திருப்பதி பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
ADDED :4373 days ago
திருமலை: ஆந்திர மாநிலம் சீமாந்திராவில் பஸ் போக்குவரத்து தொடங்கியதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இலவச தரிசனத்திற்கு சுமார் 18 மணி நேரம் ஆனது. வெளிமாநிலங்களில் இருந்தும் சீமாந்திராவிற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனினும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வழக்கம்போல் சுமார் 500 பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.