மதுரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு!
ADDED :4372 days ago
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்றது மதுரகாளி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 32-வது ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா கடந்த 5-ந்தேதி தொடங்கி விஜயதசமி தினம் வரை நடந்தது. இதில் உற்சவ அம்மனுக்கு மதுரகாளி, மதுரை மீனாட்சி, காமாட்சி, ராஜராஜேஸ்வரி, துர்க்கை, கருமாரி, மாரி, லட்சுமி அலங்காரமும், ஆயுதபூஜை அன்று சரஸ் வதி அலங்காரமும் நடந்தது. விஜயதசமி அன்று மாலை யில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், இரவு அம்மன் புறப்பாடு, அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் நவ ராத்திரி விழா நிறைவு அடைந் தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.