சிவன் கோவில்களில் பவுர்ணமி அன்னாபிஷேக விழா!
பொள்ளாச்சி · சிவன் கோவில்களில் பவுர்ணமி அன்னாபிஷேக விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிவன் கோவில்களில் அன்னாபிஷேகத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். பல ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பவுர்ணமி அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு இன்று (18ம் தேதி) வருகிறது. மாலை 3.00 மணியளவில் கணபதி ஹோமத்துடன் துவங்கி சிறப்பு பூஜை நடக்கிறது. சுப்பிரமணியசாமி கோவில், உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஒடையகுளம் ராஜராஜேஸ்வரி காமாட்சியம்மன் கோவில், கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அமணலிங்கேஸ்வரர் கோவில்இக்கோவிலில் முதலாம் ஆண்டு அன்னாபிஷேகம் நடக்கிறது. மாலை 3.00 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் மூல மந்திர ஜெபத்துடன் விழா துவங்குகிறது. தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நந்தீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. அமணலிங்கேஸ்வரருக்கு பழங்கள், காய்கள், அன்னம் கொண்டு அபிஷேகம் நடக்கிறது. மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.