நெல்லையில் கம்பன் கழக 229வது தொடர் சொற்பொழிவு
ADDED :4430 days ago
திருநெல்வேலி: நெல்லை கம்பன் கழகத்தின் 229வது தொடர் சொற்பொழிவு பாளை., ராமசாமி கோயில் தியாகபிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடந்தது. டாக்டர் இளங்கோவன் செல்லப்பா இறைவணக்கம் பாடினார். கண்ணபிரான் தலைமை வகித்தார். "உலகெல்லாம் கலக்கி வென்றான் என்ற தலைப்பில் பேராசிரியர் சவுந்திரராஜன் பேசினார். "யுத்த காண்டம் என்ற தலைப்பில் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் பேசினார். செயலாளர் கவிஞர் பொன் வேலுமயில் நன்றி கூறினார். பேராசிரியர் சீனிவாசன், கணேசன், வள்ளிநாயகம், முருகவேள், சண்முகசுந்தரம், ராஜகோபால், ராமன், தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.