அபிராமி அம்மன் கோயில் சித்திரவான கற்களுக்கு பூஜை
திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் மூலஸ்தான சுற்றுச்சுவர்களில் பதிக்க உள்ள சித்திரவான வரிக்கற்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் மூலஸ்தானம், அர்த்த மற்றும் மகா மண்டபங்களை கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட உள்ளன. தென்மேற்கில் கன்னிமூலையில் ஞானாம்பிகையின் மூல ஸ்தானமும், அதை தொடர்ந்து காளஹத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், அபிராமியின் மூல ஸ்தானங்களுக்கான சுற்றுச்சுவர்களும் அமைய உள்ளன. மூலஸ்தான பதிக்க உள்ள சித்திரவான வரிக்கல் சிற்ப கலைக் கூடத்தில் செதுக்கப்பட்டு வந்தன. அஸ்திவார பணிகள் முடிந்ததால், மூல ஸ்தானங்களுக்கான சுற்றுச் சுவர் அமைக்கும் பணி அக் 18 காலை 10 மணிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கியது. நிகழ்ச்சியில், திருப்பணிக்குழு தலைவர் வேலுச்சாமி, குழு உறுப்பினர்கள் குப்புச்சாமி, முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அக் 17 இரவு நான்கு ரதவீதிகளில் சித்திரவான கற்கள் ஊர்வலமா எடுத்து செல்லப்பட்டது. கோயில் கட்டுவதற்கு, பல்வேறு அமைப்புகள் சார்பில், மொத்தம் ரூ.74.25 லட்சம் கோயில் திருப்பணிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.