உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை, ராஜேஸ்வரிக்கு அக் 18 ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதியில், ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலில், யானை பலியானது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில் யானைகளுக்கு, கால் நடை துறை மூலம், ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சேலம் மண்டல கால்நடைபராமரிப்பு துறை இணை இயக்குன ஜெயப்பிரகாஷ், துணை இயக்குனர் ஜெயராமன், டாக்டர் பொன்னுவேல் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், அக் 18 சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். கோவில் யானை ராஜேஸ்வரிக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போட்டனர்.சேலம் மண்டல கால் நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது:ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலை தொடர்ந்து, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், ஐந்து லட்சத்து, 54,000 கால் நடைகளுக்கு, கோமாரி தடுப்பூசி போடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனப்பகுதியை ஒட்டி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் வளர்க்கும், பிராணிகளுக்கு, பல்வேறு தடுப்பூசிகளை போடுவத்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !