பழநி கோயில் உண்டியல் ரூ.1.40 கோடி வசூல்
ADDED :4567 days ago
பழநி: பழநி கோயில் உண்டியல் 21 நாட்களில், ஒரு கோடியே 40 லட்சத்து 65 ஆயிரத்து 990 ரூபாய் வசூலாகியுள்ளது. பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை கார்த்திகை மண்டபத்தில் நடந்தது. இதில், தங்கம் 580 கிராம், வெள்ளி 8590 கிராம், வெளிநாடுகளின் கரன்சி 472, ரொக்கமாக ஒரு கோடியே 40 லட்சத்து 65 ஆயிரத்து 990 ரூபாய் கிடைத்துள்ளது. 3.5 கிலோ எடையுள்ள பெரிய வெள்ளிவேல் உட்பட, தங்கம், வெள்ளியில் ஆன, தாலி, மோதிரம், ஆள்ரூபம், பாதம், கொலுசுகள், காசுகள் என, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி உடனிருந்தார்.