உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுபதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

பசுபதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், வஞ்சுலீசுவரர் கோவில்களில் அக் 18 அன்னாபிஷேகம் நடந்தது.இதையொட்டி பசுபதீசுவரர் கோவிலில் உள்ள பசுபதீஸ்வரர், நாகேஸ்வரர், கரியமாலீசுவரர், ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னாபிஷேகமும், அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுலர் முருகன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்தனர். இதேபோல் கரூர் அமராவதி ஆற்றின் கரையில் உள்ள வஞ்சுலீசுவரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !