உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னாபிஷேக விழா பக்தர்கள் வழிபாடு

அன்னாபிஷேக விழா பக்தர்கள் வழிபாடு

பழநி : ஜப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, பழநியிலுள்ள சிவன்கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி முதல்நாள் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, பழநியில், புதுநகர் யோகஸ்வரர், கீரனூர் வாஞ்சிஸ்வரர், மற்றும் மதன புரம் அண்ணாமலையர் கோயில் ஆகிய பல்வேறு இடங்களிலுள்ள சிவன் கோயில்களில், மாலையில் சிறப்பு அலங்காரம், செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. பழநி மாரியம்மன்கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, மகளிர் அணி சார்பில், உலக நலன், மழைவேண்டி கொல்லுக்கஞ்சி காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பழநி : ஜப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, பழநியிலுள்ள சிவன்கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !