/
கோயில்கள் செய்திகள் / பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் வழிகளில்ஆக்கிரமிப்பு அகற்றம் : ஆட்சியர் ஆய்வு
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் வழிகளில்ஆக்கிரமிப்பு அகற்றம் : ஆட்சியர் ஆய்வு
ADDED :4378 days ago
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் வழிகளில் பக்தர்கள், வாகனங்கள் செல்லத் தடையாக ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் உத்தரவிட்டார். ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். சன்னதி சாலையில் உள்ள 14 மின்கம்பங்களை அகற்றி தரைவழி மின் கேபிள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மின் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.