ஐப்பசி பூஜை: சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள்!
ADDED :4425 days ago
சபரிமலையில் தற்போது ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. உச்சபூஜையின் போது பூஜிக்கப்பட்ட கலசங்களை தந்திரி, மேல்சாந்தி மற்றும் பூஜாரிகள் எடுத்து வந்து களபாபிஷேகம் நடைபெற்றது. ஐப்பசி மாத பூஜை தரிசனத்திற்காக சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாத பூஜைக்கு பின் இன்று சபரிமலை நடை அடைக்கப்படுகிறது.