உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகோவிலில் பவுணர்மி வழிபாடு: 5,000 பேருக்கு அன்னதானம்!

பெரியகோவிலில் பவுணர்மி வழிபாடு: 5,000 பேருக்கு அன்னதானம்!

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும், கருவூரார் சன்னதியில் பவுணர்மி ஜோதி வழிபாடும், ஆன்மீக சொற்பொழிவும், முதல்கோபுரம் நுழைவாயிலில் பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை நகர கிளை அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், ஸ்ரீ அகத்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளையினர் இணைந்து செய்து வருகின்றனர். அதன்படி கடந்த, 18ம் தேதி ஐப்பசி பவுர்ணமியையொட்டி, பெரியகோவிலில் கருவூராருக்கு பவுணர்மி ஜோதி வழிபாடும், ஆன்மீக சொற்பொழிவும் நடந்தது. முதல்கோபுரம் நுழைவாயிலில் அன்னதான நிகழ்ச்சியை, கொம்பப்பட்டி ஜோதிட ஆராய்ச்சி, வாஸ்து நிபுணர் லோகநாதன், தஞ்சை மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அரசு போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர்கள் நடராஜன், திருஞானம் ஆகியோர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என, ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நடப்பு மாதம் பெரியகோவிலில் பவுர்ணமி தினத்தில் அன்னதானம் நடந்த நிலையில், அடுத்த மாதம் (நவ.,) பவுர்ணமி தினமான, 17ம் தேதி, திருவண்ணாமலையில் அன்னதானம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !