சத்ய சாய் பாபாவின் 88வது பிறந்த நாள் விழா!
ADDED :4375 days ago
சென்னை: சத்ய சாய் பாபாவின், 88வது பிறந்தநாள் விழா, சென்னை ரங்கராஜபுரத்தில் நேற்று நடந்தது. சத்ய சாய் பாபாவின், 88வது பிறந்த நாள் மற்றும் சத்ய சாய் பாபா தான் ஷீரடி சாய்பாபாவின் அவதாரம் என, அறிவித்த தின விழா, சென்னை ஸ்ரீ சத்ய சாய் சேவா சங்கம் (மேற்கு), மற்றும் சென்னை ரங்கராஜபுரம் சமிதியின் சார்பில், வாத்தியார் தோட்டம், சாய்முருகன் டிரஸ்ட் கோவிலில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிவ பார்வதி கல்யாண மகோற்சவம், காலை, 7:30 மணியில் இருந்து, 10:30 மணி வரை நடத்தப்பட்டது. ஷீரடி பாபா, சத்ய சாய் பாபாவின் விக்கிரகங்களுக்கு பக்தர்களால் அபிஷேக ஆராதனை நடந்தப்பட்டது.