காஞ்சி பீடாதிபதிகள் ஆசியுடன் கோடி லலிதா சகஸ்ரநாம பாராயணம்
ADDED :249 days ago
கோவை; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் கோவை ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திர மண்டலி மற்றும் ஸ்ரீ புவனேஸ்வர பக்த மண்டலி (பெங்களூர்) சார்பில் இணைந்து கோடி லலிதா சகஸ்ரநாம பாராயணம் ஞாயிற்றுக்கிழமை 08-02-2026 அன்று காலை 09- மணி முதல் மதியம் 12 - 30 மணி வரை கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதை இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு லலிதா சகஸ்ர நாமத்தை உச்சரித்தனர். இந்த நிகழ்வின் நிறைவில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. .இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.