18 கிராமத்தினர் கொண்டாடிய முத்தாலம்மன் கோயில் திருவிழா!
ADDED :4375 days ago
எழுமலை: எழுமலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு எ.பெருமாள்பட்டி, உத்தபுரம், எழுமலை, தச்சபட்டி, ஆத்தாங்கரைபட்டி, மேலப்பட்டி, சீல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த கிராமமக்கள் கலந்து கொண்ட முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. 2 நாட்கள் நடந்த விழாவில், முதல் நாளான நேற்று முன்தினம் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் புதிதாக செய்யப்பட்ட அம்மன் சிலைகள், எழுமலை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மாலையில் மீண்டும் சிலைகள் அவரவர் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. 2ம் நாளான நேற்று காலை, கோயில் முன் பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். மாலையில் தேரோட்டம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.