உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் சிலைகள் பாதுகாக்க கட்டிடம் கட்ட ஒரு கோடி நிதி!

கோவில் சிலைகள் பாதுகாக்க கட்டிடம் கட்ட ஒரு கோடி நிதி!

பெரம்பலூர்: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கோவில் உள்ள சிலைகள் பாதுகாக்கும் வகையில் அரசு சார்பில் கட்டிடங்கள் கட்ட ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு இல்லாத சிலைகளை பாதுகாக்கும் வகையில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மைய கட்டிடம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருந்தார்.இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் கோவில்களில் பாதுகாப்பு இல்லாத சிலைகளை பாதுகாக்கும் வகையில் பெரம்பலூர் மதனகோபாசுவாமி மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையம் கட்டிடம் கட்ட 49 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதேபோல், அரியலூர் மாவட்டத்தில் கோவில்களில் பாதுகாப்பு இல்லாத சிலைகளை பாதுகாக்கும் வகையில் அரியலூர் ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையம் கட்டிடம் கட்ட 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அரியலூரில் கட்டிடம் கட்டுவதற்கான டெண்டர் வரும் 6ம் தேதியும், பெரம்பலூரில் கட்டிடம் கட்டுவதற்கான டெண்டர் வரும் 7ம் தேதியும் விடப்பட்டு கட்டுமானப்பணிகள் துவங்கவுள்ளது. கட்டிடம் கட்டப்பட்டு அதனுள் மேலும் ஒரு கோடியில் இரும்பு கதவு கொண்ட அறைகள் அமைக்கப்படும். பின்னர் மாவட்டங்களில் பாதுகாப்பு இல்லாத சிலைகள் அனைத்தும் இந்த பாதுகாப்பு மைய கட்டிடத்தில் கொண்டு வந்து வைக்கப்படும்.இவ்வாறு அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !