பழனி வையாபுரி குளத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!
பழனி நகரின் வையாபுரி குளமானது நகரின் முக்கிய நிலத்தடி நீர்மட்டமாக உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி பராமரிக்க பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளத்தை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியை கோட்டாச்சியர் சுந்தரராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். வட்டாச்சியர் பாலசுப்பிரமணியன் கிராம நிர்வாக அலுவலர் நகுலன் வாசவி கிளப் பாலாஜி அரிமா சங்க மனோகரன் வேதாத்ரி பயிலக நிறுவனர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, அன்னை பார மெடிக்கல், ஆர்.ஆர்.ஐடிஐ ஆகியவற்றின் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். விழிப்புணர்வு நோட்டீஸ்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விவேகானந்தா சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.